/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
'நான் முதல்வன்' திட்டத்தில் 66,040 மாணவர்கள் பயன்
/
'நான் முதல்வன்' திட்டத்தில் 66,040 மாணவர்கள் பயன்
ADDED : மே 14, 2024 08:22 PM
காஞ்சிபுரம்:தமிழக மாணவ -- மாணவியரில் தனித்திறமைகளை அடையாளம் கண்டு, அவற்றை ஊக்குவித்து, பல்வேறு திறன் சார்ந்த பயிற்சிகளை, 'நான் முதல்வன்' திட்டம் வாயிலாக வழங்கப்பட்டு வருகின்றன. பயிற்சி வழங்குவதோடு, வேலைவாய்ப்பு முகாம்கள் மூலமாகவும், இத்திட்டத்தின் வேலைவாய்ப்பு பெற்று கொடுக்கப்பட்டுள்ளன.
மேலும், உயர்கல்வியில் எங்கு, எப்படி படிக்கலாம் என்ற விபரங்களுடன், ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், நேர்முக தேர்வுக்கு தயாராவதற்கு இத்திட்டத்தின் கீழ் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.
தமிழக அளவில், இத்திட்டத்தின் கீழ், 28 லட்சம் கல்லுாரி மாணவ - மாணவியருக்கு திறன் சார்ந்த பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.
கடந்த 2022ல் துவங்கப்பட்ட 'நான் முதல்வன்' திட்டத்தில், காஞ்சிபுரம் மாவட்டத்தில், 66,040 மாணவ - மாணவியர் பயன் பெற்றுள்ளதாக, கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.

