/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தென்னேரியில் 7 மாடுகள் மயங்கி விழுந்து பலி
/
தென்னேரியில் 7 மாடுகள் மயங்கி விழுந்து பலி
ADDED : ஏப் 30, 2024 09:43 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் அருகே, தென்னேரி கிராமத்தில், கால்நடை விவசாயிகளுக்கு சொந்தமான, 9 மாடுகள் நேற்று, மதியம் 3:00 மணியளவில், மேய்ச்சலுக்கு சென்றன.
அப்போது, திடீரென மாடுகள் ஒன்றன் பின் ஒன்றாக மயங்கி விழுந்துள்ளன. கிராமத்தினர், உடனடியாக கால்நடை மருத்துவருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
மருத்துவக்குழு நேரில் சென்று சிகிச்சை அளித்ததில், இரு மாடுகள் காப்பாற்றப்பட்டன. ஆனால், ஏழு மாடுகள் இறந்தன. இதுகுறித்து, வாலாஜாபாத் தாசில்தார் சதீஷ் நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.
கால்நடை மருத்துவ குழுவினர், மாடுகளுக்கு பிரேத பரிசோதனை செய்தனர். மாடுகள் இறந்த காரணம் குறித்து, பரிசோதனை அறிக்கையில் தெரிய வரும் என, கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.