/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
'மக்களுடன் முதல்வர்' முகாமில் 720 கோரிக்கை மனுக்கள் ஏற்பு
/
'மக்களுடன் முதல்வர்' முகாமில் 720 கோரிக்கை மனுக்கள் ஏற்பு
'மக்களுடன் முதல்வர்' முகாமில் 720 கோரிக்கை மனுக்கள் ஏற்பு
'மக்களுடன் முதல்வர்' முகாமில் 720 கோரிக்கை மனுக்கள் ஏற்பு
ADDED : ஆக 08, 2024 11:46 PM
வாலாஜாபாத்:அரசின் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள், ஊராட்சிகளில் பொது மக்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்கள் பெறும்,'மக்களுடன் முதல்வர்' திட்ட முகாம், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2ம் கட்டமாக பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்ட வாரணவாசி, தேவேரியம்பாக்கம், நத்தாநல்லூர், குண்ணவாக்கம், வேண்பாக்கம் ஆகிய ஊராட்சிகளுக்கான முகாம் வாரணவாசி ஊராட்சியில் நேற்று நடந்தது.
காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி மற்றும் உத்திரமேரூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., சுந்தர் ஆகியோர் முகாமை துவக்கிவைத்தனர்.
வருவாய்த் துறை, ஆதிதிராவிட நலத்துறை, சமூக நலத்துறை, கூட்டுறவுத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, தமிழ்நாடு மின்சார வாரியம் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் பொதுமக்களிடம் மனுக் களை பெற்று ஆன்லைனில் பதிவிறக்கம் செய்தனர்.
முகாமில் வருவாய் துறை வாயிலாக தீர்வு காண வேண்டிய 500 மனுக்கள் உட்பட 720 மனுக்கள் பெறப்பட்டன.
இம்முகாமில், வாலாஜாபாத் ஒன்றிய குழு தலைவர் தேவேந்திரன், வாலாஜாபாத் தாசில்தார் கருணாகரன், வாலாஜாபாத் வட்டார வளர்ச்சி அலுவலர் கண்ணன் மற்றும் ஊராட்சித் தலைவர் பிரேமா உட்பட பலர் பங்கேற்றனர்.