/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
செம்பரம்பாக்கத்தில் 8.0 செ.மீ., மழை பதிவு
/
செம்பரம்பாக்கத்தில் 8.0 செ.மீ., மழை பதிவு
ADDED : ஆக 05, 2024 09:11 PM
காஞ்சிபுரம்:ஞ்சிபுரம் மாவட்டத்தில், சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. மாவட்டத்தில் உள்ள ஐந்து தாலுகாக்களிலும் நேற்று முன்தினம் கனமழை பெய்தது.
இதில், இரவு முழுதும் பெய்த மழை, நேற்று அதிகாலை வரை நீடித்தது. பேரிடர் மேலாண்மை துறை கணக்கெடுப்பில், செம்பரம்பாக்கத்தில் அதிகபட்சமாக 8.0 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. குறைந்தபட்சமாக, வாலாஜாபாத்தில் 3.6 செ.மீ.,மழை பதிவாகியிருப்பது தெரியவந்துள்ளது.
நீர்வரத்து துவக்கம்
கனமழையால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு 577 கன அன அடி நீர் வர துவங்கியுள்ளது. சென்னையின் குடிநீர் ஆதாரமான செம்பரம்பாக்கம் ஏரி 3.645 டி.எம்.சி.,கொள்ளளவும், 24 அடி உயரம் நீர் மட்டமும் கொண்டது.
நேற்று முன்தினம் இரவு ஏரியின் நீர் பிடிப்பு பகுதியில் பெய்த கன மழையால் ஏரிக்கு நீர்வரத்து துவங்கியுள்ளது. இதனால், ஏரியின் நீர் மட்டம் மெல்ல உயர்ந்து வருகிறது.
நேற்றைய நிலவரப்படி ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 577 கன அடியும், கொள்ளளவு 1.441 டி.எம்.சி.,யும், நீர் மட்ட உயரம் 14.50 அடியாக உள்ளது.