/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
184 பயனாளிக்கு 8.76 கோடியில் நலத்திட்ட உதவி
/
184 பயனாளிக்கு 8.76 கோடியில் நலத்திட்ட உதவி
ADDED : ஜூலை 31, 2024 02:04 AM
காஞ்சிபுரம்:ஸ்ரீபெரும்புதுார் தாலுகாவிற்கு உட்பட்ட, வல்லம்-வடகால் ஊராட்சியில், 706 கோடி ரூபாய் மதிப்பில், 18,720 தொழிலாளர்கள் தங்கும் வகையில் கட்டப்பட்டு வரும் பிரமாண்ட விடுதியை, சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன் ஆய்வு செய்தார்.
இதையடுத்து, காஞ்சிபுரம் எஸ்.எஸ்.கே.வி., மகளிர் மேல்நிலைப்பள்ளியில், 2024- - 25ம் கல்வியாண்டில், பிளஸ் 1 மாணவர்களுக்கான, இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில், 8,501 மாணவ - மாணவியருக்கு அமைச்சர் சைக்கிள் வழங்கினார்.
தொடர்ந்து, கலெக்டர் வளாக கூட்டரங்கில், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்களிடம் மனுக்களை பெறும், குறைதீர் கூட்டம் நடந்தது.
இந்நிகழ்ச்சியில், 45 மாணவ - மாணவியருக்கு, 5.8 கோடியில் கல்விக்கடனும், மாற்றுத்திறனாளிகளுக்கு பெட்ரோல் ஸ்கூட்டர்களும், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கி கடனுதவியும் என, பல்வேறு துறை சார்பில், மொத்தம் 184 பயனாளிகளுக்கு, 8.76 கோடி ரூபாய் மதிப்பில், நலத்திட்ட உதவிகளை அமைச்சர் அன்பரசன் வழங்கினார்.