sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

ஓட்டுப்பதிவு விபரங்களை வெளியிடுவதில் குளறுபடி வாக்காளர் அட்டை பயன்படுத்தி ஓட்டளித்த 90.9 சதவீதம் பேர்

/

ஓட்டுப்பதிவு விபரங்களை வெளியிடுவதில் குளறுபடி வாக்காளர் அட்டை பயன்படுத்தி ஓட்டளித்த 90.9 சதவீதம் பேர்

ஓட்டுப்பதிவு விபரங்களை வெளியிடுவதில் குளறுபடி வாக்காளர் அட்டை பயன்படுத்தி ஓட்டளித்த 90.9 சதவீதம் பேர்

ஓட்டுப்பதிவு விபரங்களை வெளியிடுவதில் குளறுபடி வாக்காளர் அட்டை பயன்படுத்தி ஓட்டளித்த 90.9 சதவீதம் பேர்


ADDED : ஏப் 23, 2024 04:15 AM

Google News

ADDED : ஏப் 23, 2024 04:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம், : காஞ்சிபுரம் லோக்சபா தொகுதிக்கான தேர்தல், கடந்த 19ம் தேதி 1,932 ஓட்டுச்சாவடிகளில் நடந்தது. தேர்தலில் ஓட்டுப்பதிவு எத்தனை சதவீதம் பதிவாகியுள்ளது என்ற சரியான புள்ளி விபரங்களையே, தேர்தல் அதிகாரிகள் மூன்று நாட்கள் கழித்து, நேற்று தான் வெளியிட்டனர். மூன்று நாட்களாகியும், ஓட்டுப்பதிவு விபரங்களை சரியாக வெளியிடுவதில், அதிகாரிகள் திணறியுள்ளனர்.

காஞ்சிபுரம் தொகுதிக்குட்பட்ட ஆறு சட்டசபை தொகுதியிலும், 17.48 லட்சம் ஓட்டுகள் உள்ளன. இதில், 12 லட்சத்து, 53 ஆயிரத்து, 582 பேர் ஓட்டு செலுத்தியுள்ளனர். இது, 71.68 சதவீதமாகும்.

தேர்தல் நடந்த வெள்ளிக்கிழமை இரவு 11:00 மணிக்கு ஒரு விபரமும், சனிக்கிழமை மதியம் 1:00 மணிக்கு ஒரு விபரமும் வெளியிட்டனர். சனிக்கிழமை வெளியிட்ட ஓட்டுப்பதிவு விபரங்கள் பல தவறாக இருந்தன.

இதைத் தொடர்ந்து, இறுதியாக சரியான விபரங்களை, திங்கட்கிழமையான நேற்று தான், தேர்தல் அதிகாரிகள் வெளியிட்டனர். புள்ளி விபரங்கள் சேகரிப்பில், கடந்த மூன்று நாட்கள் ஏகப்பட்ட குழப்பங்கள் ஏற்பட்டுள்ளது.

தேர்தலில் பதிவான 12.53 லட்சம் ஓட்டுகளில், வாக்காளர் அடையாள அட்டையை பயன்படுத்தி, 11.3 லட்சம் பேர் ஓட்டளித்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. இது, 90.9 சதவீதமாகும்.

வாக்காளர் அடையாள அட்டையை தவிர்த்து, பான் கார்டு, ஆதார் கார்டு போன்ற பிற வகையான ஆவணங்களை பயன்படுத்தி, 1.13 லட்சம் வாக்காளர்கள் ஓட்டு செலுத்தியுள்ளனர். இது, 9.0 சதவீதம்.

வாக்காளர்கள் அனைவரிடமும், ஆதார் உள்ளிட்ட பல்வேறு அடையாள அட்டைகள் இருப்பினும், தேர்தல் நாளில், தங்களின் வாக்காளர் அட்டையை மறக்காமல் பயன்படுத்துவது தெரியவந்துள்ளது.

அதேபோல், காஞ்சிபுரம் லோக்சபா தொகுதியில், பெண்களை காட்டிலும் இம்முறை ஆண்கள் அதிக ஓட்டு செலுத்தியுள்ளனர். மொத்தமுள்ள 8.53 லட்சம் ஆண் வாக்காளர்களில், 6.31 லட்சம் பேர் ஓட்டளித்துள்ளனர்; இது,74.0 சதவீதம்.

அதேபோல், மொத்தமுள்ள 8.9 லட்சம் பெண் வாக்காளர்களில், 6.21 லட்சம் பேர் மட்டுமே ஓட்டளித்துள்னர். இது, 69.1 சதவீதம். மூன்றாம் பாலினத்தவர்களில், 303 பேரில், 83 பேர் மட்டுமே ஓட்டளித்துள்ளனர்.

வாக்காளர் அட்டையை பயன்படுத்தி ஓட்டளித்தோர் மற்றும் பிற ஆவணங்களை பயன்படுத்தி ஓட்டளித்தோர் விபரம்

சட்டசபை தொகுதி வாக்காளர் அட்டை பயன்படுத்தியோர் சதவீதம் பிற ஆவணங்களை பயன்படுத்தியோர் சதவீதம்செங்கல்பட்டு 2,27,968 86.5 35,364 13.4திருப்போரூர் 2,10,772 94.4 12,409 11.0செய்யூர் 1,51,950 90.3 16,287 9.6மதுராந்தகம் 1,36,687 77.1 40,566 22.8உத்திரமேரூர் 2,01,004 97.8 4,355 2.2காஞ்சிபுரம் 2,11,332 97.7 4,888 2.2மொத்தம் 11,39,713 90.9 1,13,869 9.0








      Dinamalar
      Follow us