/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தடுப்புச்சுவர் இல்லாத பாலம்; கரணம் தப்பினால் மரணம்
/
தடுப்புச்சுவர் இல்லாத பாலம்; கரணம் தப்பினால் மரணம்
தடுப்புச்சுவர் இல்லாத பாலம்; கரணம் தப்பினால் மரணம்
தடுப்புச்சுவர் இல்லாத பாலம்; கரணம் தப்பினால் மரணம்
ADDED : ஆக 09, 2024 09:57 PM

வாலாஜாபாத்: காஞ்சிபுரம்- - செங்கல்பட்டு நெடுஞ்சாலையில், வாலாஜாபாத் அடுத்துசங்கராபுரம் கூட்டுச்சாலை உள்ளது. இப்பகுதியில் இருந்து சங்கராபுரம் வழியாக தேவரியம்பாக்கம் செல்லும் இணைப்பு சாலை உள்ளது.
இச்சாலையை பயன் படுத்தி சங்கராபுரம் சுற்று வட்டார கிராமவாசிகள் வாலாஜாபாத், காஞ்சிபுரம், செங்கல்பட்டு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.
இச்சாலையில், சங்கராபுரம் அருகே பழையசீவரம் ஏரிக்கு செல்லும் நீர்வரத்து கால்வாயின் இணைப்பாக தரைப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த தரைப்பாலத்தின் இருபுறமும் இடைவெளி விட்டு சிமென்ட் துாண் தடுப்பு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. எனினும், அது பாதுகாப்பானதாக இல்லாததால், இரவு நேரங்களில் பயணிக்கும் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்து அச்சத்தில் சென்று வருகின்றனர்.
எனவே, வாகன ஓட்டி களின் நலன் கருதி, தரைப்பாலத்திற்கு தடுப்புச்சுவர் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.