/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கன்டெய்னர் லாரி மோதியதில் உடைந்து விழுந்த சிக்னல் கம்பம்
/
கன்டெய்னர் லாரி மோதியதில் உடைந்து விழுந்த சிக்னல் கம்பம்
கன்டெய்னர் லாரி மோதியதில் உடைந்து விழுந்த சிக்னல் கம்பம்
கன்டெய்னர் லாரி மோதியதில் உடைந்து விழுந்த சிக்னல் கம்பம்
ADDED : ஜூலை 23, 2024 11:03 PM

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் -- சிங்கபெருமாள் கோவில் நெடுஞ்சாலையில், ஒரகடம் அடுத்த, மாத்துாரில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது.
இங்கு, சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த 1000க்கும் அதிகமான மாணவ - மாணவியர் படித்து வருகின்றனர்.
இந்த நெடுஞ்சாலையில், பள்ளி எதிரே போக்குவரத்தை ஒழுங்குபடுத்த தானியங்கி சிக்னல் அமைக்கப்பட்டது.
இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு, இங்கு 'யூ-டர்ன்' எடுத்த கன்டெய்னர் லாரி மோதியதில் சிக்னல் கம்பம் உடைந்து சாலையில் விழுந்தது.சாலையில் விழுந்த சிக்னல் கம்பத்தால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது. மேலும், மறுபுறத்திலிருந்து சாலையை கடந்து பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் அச்சத்துடன் சென்றனர்.நேற்று மாலை வரை சாலையில் விழுந்த சிக்னல் கம்பம் அகற்றப்படவில்லை.