/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சரக்கு ரயிலில் மாடு சிக்கியதால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
/
சரக்கு ரயிலில் மாடு சிக்கியதால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
சரக்கு ரயிலில் மாடு சிக்கியதால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
சரக்கு ரயிலில் மாடு சிக்கியதால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
ADDED : ஆக 01, 2024 01:21 AM

காஞ்சிபுரம்:வாலாஜாபாத் கார் முனையத்தில் இருந்து, கார் ஏற்றி செல்லும் சரக்கு ரயில், நேற்று, மாலை 4:50 மணி அளவில் வட மாநிலத்திற்கு புறப்பட்டு சென்றது. இந்த சரக்கு ரயிலுக்கு வழி விடுவதற்கு ஏற்ப, 5:15 மணிக்கு கரியன்கேட்டில் கேட் மூடப்பட்டது.
காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையம் - கரியன்கேட் இடையே, ரயிலில் மாடு ஒன்று சிக்கி இறந்தது. இதை, ரயில்வே ஊழியர்கள் நீண்ட நேரம் போராடி மீட்டனர்.
இதனால், கரியன்கேட் பகுதியில், அரக்கோணம் மார்க்கம் மற்றும் காஞ்சிபுரம் மார்க்கம் என, இருபுறங்களிலும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
அரக்கோணத்தில் இருந்து சென்னை கடற்கரை சென்ற மின்சார ரயில், திருமால்பூரில் நிறுத்தப்பட்டு இருந்தது. இதனால், 1 மணி நேரம் தாமதமாக மின்சார ரயில் புறப்பட்டு சென்றது.