/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
போலீசாரின்றி வெறிச்சோடிய தற்காலிக சோதனைச்சாவடி
/
போலீசாரின்றி வெறிச்சோடிய தற்காலிக சோதனைச்சாவடி
ADDED : செப் 09, 2024 04:44 AM

வளத்துார் : சென்னையின் மிகப்பெரிய, 2வது விமான நிலையம், பரந்துார் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் அமைய உள்ளன.
இந்த விமான நிலையம் வேண்டாம் என, ஏகனாபுரம், நாகப்பட்டு, தண்டலம் உள்ளிட்ட பல்வேறு கிராமத்தினர் பல விதமான போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த விமான நிலையம் எதிர்ப்பு தெரிவித்து போராடும் கிராமத்தினர் மற்றும் பல்வேறு தரப்பினரை கட்டுப்படுத்தும் விதமாக சுங்குவார்சத்திரம் காவல் நிலையம் சார்பில், கண்ணன்தாங்கல், எடையார்பாக்கம், மேலேரி ஆகிய இடங்கள் மற்றும் காஞ்சிபுரம் தாலுகா காவல் நிலையம் சார்பில், வளத்துார், பரந்துார், காட்டுப்பட்டூர், தொடூர் ஆகிய கிராமங்களில், தற்காலிக சோதனைச்சாவடிகளை அமைத்து, போலீசார் கண்காணித்து வந்தனர்.
லோக்சபா தேர்தலுக்கு பின், வளத்துார், காட்டுப்பட்டூர், மேலேரி, எடையார்பாக்கம் ஆகிய பகுதிகளில் கண்காணிப்பு தளர்வு செய்யப்பட்டு உள்ளன.
பரந்துார் மற்றும் கண்ணன்தாங்கல் ஆகிய சோதனைச்சாவடிகளில் மட்டுமே போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
எனவே, அனைத்து சோதனைச்சாவடிகளிலும் போலீசார் கண்கணிக்க வேண்டும் என, எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.