ADDED : செப் 07, 2024 07:25 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்றத்துார்:குன்றத்துார் அருகே கெருகம்பாக்கத்தில் பர்னிச்சர்கள் தயாரிக்கும் சிறிய தொழிற்சாலை மற்றும் கிடங்கு உள்ளது. நேற்று அதிகாலை, தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது. பூந்தமல்லி, விருகம்பாக்கம், மதுரவாயல், அம்பத்துார் ஆகிய தீயணைப்பு நிலையங்களில் இருந்து, ஐந்து வாகனங்களில் விரைந்த வீரர்கள் தீயை அணைத்தனர்.
அதற்குள் அங்கிருந்த இயந்திரங்கள், மூலப்பொருட்கள், உற்பத்தி செய்யப்பட்ட பர்னிச்சர்கள் என, அனைத்தும் தீக்கிரையாயின. விபத்து குறித்து மாங்காடு போலீசார் விசாரிக்கின்றனர்.