/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஐந்தா வது மாடியிலிருந்து குதித்து மருத்துவ மாணவி தற்கொலை
/
ஐந்தா வது மாடியிலிருந்து குதித்து மருத்துவ மாணவி தற்கொலை
ஐந்தா வது மாடியிலிருந்து குதித்து மருத்துவ மாணவி தற்கொலை
ஐந்தா வது மாடியிலிருந்து குதித்து மருத்துவ மாணவி தற்கொலை
ADDED : செப் 02, 2024 05:40 AM
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே, மருத்துவ கல்லுாரி விடுதியில் தங்கியிருந்த மாணவி, 5வது மாடியிலிருந்து குதித்து நேற்று தற்கொலை செய்து கொண்டார்.
துாத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஷர்லி, 24; இவர், காஞ்சிபுரம் அருகே காரைப்பேட்டையில் உள்ள மீனாட்சி மருத்துவக் கல்லுாரியில், விடுதியில் தங்கி ஐந்தாம் ஆண்டு படித்து வந்தார்.
இந்நிலையில், நேற்று இரவு 8:00 மணியளவில், விடுதியில் உள்ள 5வது மாடியிலிருந்து குதித்து, ஷர்லி தற்கொலை செய்து கொண்டார்.
தகவலறிந்த பொன்னேரிக்கரை காவல் நிலைய போலீசார், விடுதியில் தங்கியிருக்கும் சக மாணவியரிடமும், கல்லுாரி நிர்வாகத்தினரிடமும் தற்கொலைக்கான காரணம் குறித்து, விசாரித்து வருகின்றனர்.
பொன்னேரிக்கரை போலீசார் உடலை கைப்பற்றி காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து பல்வேறு கோணங்களில் விசாரிக்கின்றனர்.