/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஏரியில் குளித்தவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு
/
ஏரியில் குளித்தவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு
ADDED : மே 26, 2024 01:34 AM
ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் பேரூராட்சிக்குட்பட்ட, வி.ஆர்.பி., சத்திரத்தைச் சேர்ந்தவர் சூர்யா, 26. மதுபோதையில், நேற்று முன்தினம் மாலை, நண்பர்களுடன் ஸ்ரீபெரும்புதுார் ஏரிக்கு குளிக்க சென்றார்.
அப்போது, எதிர்பாராத விதமாக, திடீரென ஏரி நீரில் மூழ்கி மாயமானார். உடன் குளித்த நண்பர்கள், ஸ்ரீபெரும்புதுார் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
மேலும், இது குறித்த தகவலின்படி, ஸ்ரீபெரும்புதுார் தீயணைப்பு துறை வீரர்கள், ஏரியில் மூழ்கி மாயமான சூர்யாவை, இரவு முழுதும் தேடியும் கிடைக்காத நிலையில், நேற்று காலை, சூர்யாவின் உடலை மீட்டனர்.
ஸ்ரீபெரும்புதுார் போலீசார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக, ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.