/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
அண்ணா பட்டு கைத்தறி நெசவாளர்கள் போராட்டம் சங்கத்திடம் ரூ.3.8 கோடி ரூபாய் கேட்கும் தனியார் கடை
/
அண்ணா பட்டு கைத்தறி நெசவாளர்கள் போராட்டம் சங்கத்திடம் ரூ.3.8 கோடி ரூபாய் கேட்கும் தனியார் கடை
அண்ணா பட்டு கைத்தறி நெசவாளர்கள் போராட்டம் சங்கத்திடம் ரூ.3.8 கோடி ரூபாய் கேட்கும் தனியார் கடை
அண்ணா பட்டு கைத்தறி நெசவாளர்கள் போராட்டம் சங்கத்திடம் ரூ.3.8 கோடி ரூபாய் கேட்கும் தனியார் கடை
ADDED : ஆக 09, 2024 12:29 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், 22 பட்டு கைத்தறி கூட்டுறவு சங்கங்கள் இயங்கி வருகின்றன. இதில், 36,000 நெசவாளர்கள் உறுப்பினர்களாக இருந்தாலும், 4,500 பேர் மட்டுமே பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதில், அதிக நெசவாளர்களை கொண்டதும், லாபத்தில் இயங்கக்கூடிய சங்கமாக, அண்ணா பட்டு கைத்தறி சங்கம் செயல்படுகிறது. இதில், 2,750 நெசவாளர்கள் உறுப்பினர்களாக உள்ள நிலையில், 1,200 பேர், பட்டு சேலை உற்பத்தியில் தற்போது ஈடுபட்டு வருகின்றனர்.
ஆண்டுக்கு 50 கோடி ரூபாய்க்கு பட்டு சேலை விற்பனை, இச்சங்கத்தில் நடக்கிறது. ஆண்டுதோறும் போனஸ் உள்ளிட்ட சலுகைகளும் நெசவாளர்களுக்கு வழங்கப்படுகிறது.
சங்கத்தின் விற்பனை மையம், காஞ்சிபுரம் காந்தி ரோட்டில் உள்ள வாடகை கட்டடத்தில் பல ஆண்டுகளாக இயங்கி வந்தது. இந்நிலையில், 2012ல், கட்டடத்தின் உரிமையாளர், தனியார் பட்டு சேலை கடையின் உரிமையாளருக்கு விற்பனை செய்துள்ளார்.
அதுவரை, மாத வாடகையாக, 11,000 ரூபாய், சங்கம் வழங்கி வந்தது. விற்பனை மைய கட்டடம், தனியார் கடை உரியைாளருக்கு சென்ற பின், மாத வாடகையாக 4.85 லட்ச ரூபாய் என, 79 மாதங்களுக்கு, 3.8 கோடி ரூபாயை, சங்கத்திடம், தனியார் கடை உரிமையாளர் கேட்டுள்ளார்.
இதை தர மறுத்த அண்ணா பட்டு கைத்தறி சங்கம், நீதிமன்ற வழக்கு தொடுத்தது. ஆனால், தனியார் கடை உரிமையாளருக்கு சாதகமாக தீர்ப்பு கிடைத்துள்ளது. வாடகை பாக்கி, 3.8 கோடி ரூபாயை, சங்கம் உடனடியாக கொடுத்துவிட்டு காலி செய்ய வேண்டும் என, தனியார் கடை உரிமையாளர் நெருக்கடி கொடுத்து வருகிறார்.
இதனால், அண்ணா பட்டு கைத்தறி சங்க நெசவாளர்கள், 500க்கும் மேற்பட்டோர், காந்தி ரோட்டில், கவன ஈர்ப்பு போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர்.
அண்ணா சங்கத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்லாமல், பிற கைத்தறி சங்கத்தைச் சேர்ந்த முன்னாள் நிர்வாகிகள் பலரும் இப்போராட்டத்தில் பங்கேற்றனர். தமிழக அரசின் பார்வைக்கு, இப்பிரச்னை கொண்டு செல்ல வேண்டும் என, நெசவாளர்கள் கேட்டுக் கொண்டனர்.