/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வேலாத்தம்மன் கோவிலில் கூழ்வார்த்தல் விழா விமரிசை
/
வேலாத்தம்மன் கோவிலில் கூழ்வார்த்தல் விழா விமரிசை
ADDED : செப் 02, 2024 10:12 PM

காஞ்சிபுரம்: சின்ன காஞ்சிபுரம், நேதாஜி நகர், வேலாத்தம்மன் மற்றும் பூவில் அமர்ந்தவள் அம்மன் கோவிலில் தீமிதி திருவிழாவையொட்டி, காப்பு கட்டும் நிகழ்வு கடந்த மாதம் 28ம் தேதி துவங்கியது.
கடந்த மாதம் 31ம் தேதி இரவு 7:00 மணிக்குஊஞ்சல் சேவை உற்சவம் நடந்தது.
நேற்று முன்தினம் காலை 10:00 மணிக்கு திருக்காலிமேடு சின்ன வேப்பங்குளக்கரையில் இருந்து அம்மன் கரகம் புறப்பாடும், மதியம் 1:00 மணிக்கு கோவில் வளாகத்தில் கூழ்வார்த் தலும் நடந்தன.
இரவு 9:00 மணிக்கு பக்தர்கள் தீ மிதித்தனர். இரவு 10:00 மணிக்கு மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய வேலாத்தம்மன், பூவில் அமர்ந்தவள் அம்மன் முக்கிய வீதி வழியாக உலா வந்தனர்.