/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சியில் 'வாக்கிங்' சென்றவரை துரத்தி கடித்த தெரு நாய்
/
காஞ்சியில் 'வாக்கிங்' சென்றவரை துரத்தி கடித்த தெரு நாய்
காஞ்சியில் 'வாக்கிங்' சென்றவரை துரத்தி கடித்த தெரு நாய்
காஞ்சியில் 'வாக்கிங்' சென்றவரை துரத்தி கடித்த தெரு நாய்
ADDED : செப் 25, 2024 07:17 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் அருகே, மத்திய அரசின் ஹெரிடேஜ் எனப்படும் பாரம்பரிய நகர் திட்டத்தின் கீழ், இலவச கழிப்பறை 6 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது.
கோவிலுக்கு வரும் பக்தர்களுக்காக இலவசமாக கட்டப்பட்ட இந்த கழிப்பறை, நாளடைவில் அப்பகுதி அரசியல்வாதி கட்டுப்பாட்டிற்கு சென்றது. கட்டண கழிப்பறையாக மாற்றி இன்று வரை பயன்படுத்தப்படுகிறது.
கழிப்பறையில் ஏராளமான நாய்கள் வளர்க்கப்படுகின்றன. அங்கு வசிக்கும் சிலர், தெரு நாய்களுக்கு உணவளிப்பதால், 50 நாய்களுக்கு மேல், கழிப்பறை அருகிலேயே சுற்றி வருகின்றன.
இதனால், அருகில் வசிப்போர், நடைபயிற்சி செல்வோர், வெளியூர் பக்தர்கள் என பலரையும் அங்குள்ள நாய்கள் கடிப்பது தொடர் கதையாகி உள்ளது. மாநகராட்சி நிர்வாகமும், கழிப்பறை மற்றும் நாய்களை கண்டுகொள்வதாக இல்லை.
இந்நிலையில், கமலக்கண்ணன் என்பவர், நேற்று காலை, நடைபயிற்சி சென்றபோது, கழிப்பறை அருகே நாய்கள் துரத்தியுள்ளன. அதில் ஒரு நாய் அவரின் கால்களில் கடித்துள்ளது.
இதையடுத்து, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் தடுப்பூசி செலுத்திக் கொண்டு, மாநகராட்சி அலுவலகத்தில் எழுத்துப்பூர்வமாக புகார் கடிதம் ஒன்றையும் அளித்துள்ளார்.
பக்தர்களுக்கு அச்சுறுத்தல் தரும் நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர், மாநகராட்சி கமிஷனர் நவேந்திரனிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.