ADDED : ஆக 07, 2024 08:17 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்,:ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி தாலுகா கண்டிகை கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணன், 40. மருந்து கடைகளுக்கு, மாத்திரைகள் சப்ளை செய்து வந்தார்.
'ஸ்பிளன்டர்' இருசக்கர வாகனத்தில், காஞ்சிபுரத்தில் இருந்து, உத்திரமேரூர் மார்க்கமாக சென்றார். அப்போது, களக்காட்டூர் அருகே, எதிரே வந்த மினி லாரி மோதியதில், சரவணன் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
லாரி டிரைவர் லாரியை நிறுத்திவிட்டு தப்பியோடி விட்டார்.
மாகரல் போலீசார் இறந்தவரின் உடலை மீட்டு, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.