ADDED : ஆக 29, 2024 09:39 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், இளநகர் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ், 30; ஆக்கூரில் உள்ள தனியார் தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றி வந்த அவர், நேற்று முன்தினம் அதிகாலை வழக்கம்போல் வீட்டில் இருந்து புறப்பட்டு, 'ஹீரோ ஸ்பிளன்டர் பிளஸ்' இருசக்கர வாகனம் வாயிலாக, தான் பணியாற்றும் தொழிற்சாலைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, காஞ்சிபுரம்- வந்தவாசி சாலையில்,பெருநகர் அருகே சாலையோரம், 'அசோக் லைலாண்ட்' மினி லாரி நிறுத்தப்பட்டு இருந்தது. லாரி மீது, டூ - வீலர் மோதியது.
இந்த விபத்தில், சுரேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்த பெருநகர் போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.