/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
முட்புதர்கள் வளர்ந்துள்ள பழவேரி சுண்ணாம்பு குளக்கரை
/
முட்புதர்கள் வளர்ந்துள்ள பழவேரி சுண்ணாம்பு குளக்கரை
முட்புதர்கள் வளர்ந்துள்ள பழவேரி சுண்ணாம்பு குளக்கரை
முட்புதர்கள் வளர்ந்துள்ள பழவேரி சுண்ணாம்பு குளக்கரை
ADDED : ஆக 08, 2024 02:32 AM

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், பழவேரி கிராம சாலையையொட்டி அப்பகுதி ஊராட்சிக்கு சொந்தமான, சுண்ணாம்பு குளம் என அழைக்கப்படும் பொதுக்குளம் உள்ளது.
கடந்த ஆண்டுகளில், அப்பகுதி விவசாய நிலங்களுக்கான நிலத்தடி நீர் ஆதாரமாக இக்குளம் இருந்தது. தற்போது கால்நடைகளுக்கான நீர்ஆதாரமாக உள்ளது.
இந்நிலையில், இந்த குளம் முறையான பராமரிப்பின்மையால் கரையை சுற்றி முட்புதர்கள் வளர்ந்து, குளத்தின் நீர்ப் பிடிப்பு பகுதி துார்ந்து, சில ஆண்டுகளாக பயன்பாடின்றி உள்ளது.
இதுகுறித்து அப்பகுதியினர் கூறியதாவது:
குளத்தின் கரைப்பகுதி மட்டும் பெயரளவிற்கு அவ்வப்போது சீர் செய்யப்படுகிறது. தரமற்ற பணி காரணமாக அடுத்த சில மாதங்களில் அது முட்புதராகி விடுகிறது.
குளத்தின் ஒரு பகுதி கரை, இரண்டு ஆண்டுகளுக்கு முன் பருவ மழைக்கு சரிந்து விழுந்தது. இதுவரை அது சீரமைக்கப்படாமல் உள்ளது.
எனவே, குளத்தை துார்வாரி சுற்றிலும் கரையின் உள்பகுதியில் கருங்கல் பதித்து புனரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,
இவ்வாறு அவர்கள்கூறினர்.