/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சாலை ஓரம் கிழிந்து தொங்கும் பேனரால் அபாயம்
/
சாலை ஓரம் கிழிந்து தொங்கும் பேனரால் அபாயம்
ADDED : ஜூன் 26, 2024 11:35 PM

காஞ்சிபுரம்:உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டும் நெடுஞ்சாலை ஓரங்களில் பேனர் வைப்பது தொடர் கதையாகி வருகிறது.
குறிப்பாக, சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையோரம் ராட்சத பில்லர்களில் பேனர்கள் வைக்கின்றனர். இந்த விளம்பர பேனர்கள் வாகன ஓட்டிகளின் கவனத்தை திசை திருப்பும் விதமாக உள்ளது. சில இடங்களில், விளம்பர பேனர்கள் கிழிந்து தொங்குவது வேடிக்கையாக உள்ளது.
உதாரணமாக, சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை, வேடல், ராஜகுளம், ஏனாத்துார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், சாலையோரம் அமைக்கப்பட்ட ராட்சத பேனர்கள் கிழிந்து தொங்கிக் கொண்டிருக்கிறது.
இது எப்போது வேண்டுமானாலும், வாகனங்கள் மீது விழுந்து விபத்து ஏற்படுத்தும் அபாயம் உள்ளது என, வாகன ஓட்டிகள் புலம்பி வருகின்றனர்.
எனவே, சாலையோரம் பேனர் அமைப்பதை முற்றிலும் தடுக்க மற்றும் கிழிந்து தொங்கும் பேனர்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.