/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தடுப்பு இன்றி மிரட்டும் வேடல் தரைப்பாலம்
/
தடுப்பு இன்றி மிரட்டும் வேடல் தரைப்பாலம்
ADDED : மே 14, 2024 06:19 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த, வேடல் கிராமத்தில்இருந்து, கூத்திரம்பாக்கம்கிராமம் வழியாக, தொடூர் கிராமத்திற்கு செல்லும் சாலை உள்ளது.
இந்த சாலையை, வேடல் கிராமத்தில் இருந்து, கூத்திரம்பாக்கம் கிராமம் வரையில், சாலையை விரிவுபடுத்தி உள்ளனர். இதில், ஐந்திற்கும் மேம்பட்ட இடங்களில், சிறுபாலங்கள் விரிவுபடுத்தப்பட்டு உள்ளன.
இதன் ஓரத்தில் தடுப்பு ஏற்படுத்தவில்லை. இதனால், அந்த சாலை வழியாக பயணம் செய்யும் வாகன ஓட்டிகள் இரவு நேரங்களில் நிலை தடுமாறி விழும் நிலை உள்ளது.
எனவே, தரைப்பாலங்களின் இருபுறமும் தடுப்பு மற்றும் ஒளிரும் தடுப்பு அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் இடையே கோரிக்கை எழுந்துள்ளது.

