/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மாநகராட்சி பள்ளி வளாகத்தில் அந்தரத்தில் தொங்கும் மரக்கிளை
/
மாநகராட்சி பள்ளி வளாகத்தில் அந்தரத்தில் தொங்கும் மரக்கிளை
மாநகராட்சி பள்ளி வளாகத்தில் அந்தரத்தில் தொங்கும் மரக்கிளை
மாநகராட்சி பள்ளி வளாகத்தில் அந்தரத்தில் தொங்கும் மரக்கிளை
ADDED : ஆக 15, 2024 10:45 PM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் சேக்குபேட்டை கவரை தெருவில் ராணி அண்ணாதுரை மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில், 300க்கும் மேற்பட்ட மாணவ- - மாணவயர் பயின்று வருகின்றனர்.
இப்பள்ளி வளாகத்தில் நிழல்தரும் பல்வேறு மரங்கள் உள்ளன. இந்நிலையில், கடந்த மாதம் பலத்த காற்றுடன் மழை பெய்தபோது, புங்கன் மரத்தின் கிளை முறிந்து கீழே விழாமல் அந்தரத்தில் தொங்கிக் கொண்டு இருக்கிறது.
பள்ளி மாணவியர், ஆசிரியைகள் நடமாட்டம் உள்ள பகுதியில், ஆபத்தான நிலையல் மரக்கிளை திடீரென முற்றிலும் முறிந்து விழுந்தால் அவ்வழியாக செல்வோர் விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது. இதனால், அவ்வழியாக செல்லும் மாணவியர், ஆசிரியையர் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.
எனவே, ராணி அண்ணாதுரை மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் விபத்து ஏற்படுவதை தவிர்க்கும் வகையில், ஊசலாடும் நிலையில் உள்ள மரக்கிளையை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.