/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மாத தவணை கட்ட கோரிய பெண் இரும்பு ராடால் அடித்து கொலை
/
மாத தவணை கட்ட கோரிய பெண் இரும்பு ராடால் அடித்து கொலை
மாத தவணை கட்ட கோரிய பெண் இரும்பு ராடால் அடித்து கொலை
மாத தவணை கட்ட கோரிய பெண் இரும்பு ராடால் அடித்து கொலை
ADDED : ஜூன் 01, 2024 10:56 PM
சென்னை:காசிமேடு, சிங்கார வேலன் நகரைச் சேர்ந்தவர் காயத்ரி, 29; மகளிர் சுயஉதவிக்குழு தலைவி. இவர், அதே பகுதியை சேர்ந்த பிரியா, அவரது மாமியார் சிவகாமிக்கு, சுயஉதவி குழு வாயிலாக, 80,000 ரூபாய் கொடுத்துள்ளார்.
வாங்கிய பணத்திற்கு, இரண்டு மாதம் தவணை தொகை கட்ட தவறியுள்ளனர். இது குறித்துகாயத்ரி, மே, 24ம் தேதி, தவணை தொகையை கட்ட கோரியுள்ளார். இதில், வாக்குவாதம்ஏற்பட்டு, பிரியாவின் கணவர் அஜித்குமார் என்பவர், இரும்பு ராடை எடுத்து, காயத்ரியை பலமாக தாக்கினார். இதில், அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
காசிமேடு போலீசார், காயமடைந்த காயத்ரியை மீட்டு, சிகிச்சைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு, அவர் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில், வழக்கு எதுவும்வேண்டாம் எனவும்,இரு தரப்பினரும் சமாதானமாக போவதாகவும்,போலீசாரிடம் தெரிவித்தனர்.
இந்நிலையில், 25ம் தேதி இரவு, மீண்டும் தலைவலி ஏற்பட்டதால், ஸ்டான்லி மருத்துவமனையில் காயத்ரி அனுமதிக்கப்பட்டார். நேற்று அதிகாலை, சிகிச்சை பலனின்றி, பரிதாபமாகஉயிரிழந்தார்.
இதையடுத்து காசிமேடுபோலீசார், கொலைவழக்காக மாற்றி, அஜித்குமாரை கைது செய்துவிசாரிக்கின்றனர்.