/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பன்னாட்டு பொது சேவை நிறுவனம் தேவரியம்பாக்கத்தில் பணி ஆய்வு
/
பன்னாட்டு பொது சேவை நிறுவனம் தேவரியம்பாக்கத்தில் பணி ஆய்வு
பன்னாட்டு பொது சேவை நிறுவனம் தேவரியம்பாக்கத்தில் பணி ஆய்வு
பன்னாட்டு பொது சேவை நிறுவனம் தேவரியம்பாக்கத்தில் பணி ஆய்வு
ADDED : ஜூலை 02, 2024 12:29 AM
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்டத்தில், 274 ஊராட்சிகள் உள்ளன. இதில், கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளில், முன்னோடியாக திகழ்ந்து வருகிறது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஊரக வளர்ச்சி துறை திட்டங்களின் செயல்பாடுகளை, பன்னாட்டு பொது சேவை நிறுவனத்தின் பிரதிநிதிகள் நேற்று மாலை ஆய்வு செய்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், தேவரியம்பாக்கம் கிராமத்தில், அங்கன்வாடி மையம், ஆரம்ப சுகாதார நிலையம், குறுங்காடு என, பல்வேறு இடங்களில் ஆர்வத்துடன் சுற்றி பார்த்தனர்.
கல் குவாரிக்கு அரவையாக எடுத்து செல்லப்படும் கல் தரிசு நிலத்தில், குறுங்காடு வளர்த்து இருப்பதை கண்டனர்.
அதன் தொழில்நுட்பத்தையும் ஊராட்சி தலைவர் அஜய்குமார் விளக்கம் அளித்தார்.
இதில், தென்னாப்ரிக்கா, ஸ்வீடன் ஆகிய நாடுகளில் இருந்து குழுவினர் வந்திருந்தனர்.