/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வேலாத்தம்மன் கோவிலில் ஆடி திருவிழா விமரிசை
/
வேலாத்தம்மன் கோவிலில் ஆடி திருவிழா விமரிசை
ADDED : ஆக 02, 2024 02:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் வரதராஜ பெருமாளின் தங்கையும், அஷ்டகாளிகளில் ஒருவரான திருவீதிபள்ளம் வேலாத்தம்மன் என்கிற பரமேஸ்வரிக்கும், மாவடி அம்மன் நகரில் எழுந்தருளியுள்ள மாவடியம்மனுக்கும் ஆடி திருவிழா நேற்று விமரிசையாக நடந்தது.
விழாவையொட்டி காலை 10:00 மணிக்கு ஜலம் திரட்டும் நிகழ்வும், மாலை 3:00 மணிக்கு வேலாத்தம்மனுக்கும், 4:30 மணிக்கு மாவடியம்மனுக்கும் பக்தர்கள் ஊரணி பொங்கல் வைத்து படையலிட்டனர்.
இரவு 7:00 மணிக்கு மாவடியம்மன் வர்ணிப்பும், இரவு 8:00 மணிக்கு ஜலம் திரட்டும் நிகழ்ச்சியும், இரவு 10:00 மணிக்கு கும்பம் படையலிட்டு அம்மன் வர்ணிப்பும் நடந்தது.