/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கோவில் மீது சாய்ந்த மரத்தால் காஞ்சியில் விபத்து அபாயம்
/
கோவில் மீது சாய்ந்த மரத்தால் காஞ்சியில் விபத்து அபாயம்
கோவில் மீது சாய்ந்த மரத்தால் காஞ்சியில் விபத்து அபாயம்
கோவில் மீது சாய்ந்த மரத்தால் காஞ்சியில் விபத்து அபாயம்
ADDED : ஜூலை 19, 2024 01:29 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவில் வடக்கு மாட வீதியில், சாலையோரம் பழமையான துாங்கு மூஞ்சி மரம் என அழைக்கப்படும் பண்ணி வாகை மரம் உள்ளது. சாய்ந்து விழும் நிலையில் உள்ள இம்மரத்தை காமாட்சியம்மன் கோவில் வடக்கு பகுதி மதில் சுவர் தாங்கிபிடித்துள்ளது.
காஞ்சிபுரத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்யும்போது, இம்மரம் முற்றிலும் சாய்ந்து விழுந்தால், அப்பகுதியில் நிறுத்தப்படும் வாகனங்களும் சேதமாகும் நிலை உள்ளது.
மேலும், பக்தர்கள், நடைபாதை வியாபாரிகள், இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் விபத்தில் சிக்கி, உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சாய்ந்த நிலையில் உள்ள மரத்தின் உறுதித்தன்மையை ஆய்வு செய்து மரத்தை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்தி உள்ளனர்.