/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வரும் 7ல் ஆடிப்பூரம் வளையல் அலங்காரம்
/
வரும் 7ல் ஆடிப்பூரம் வளையல் அலங்காரம்
ADDED : ஆக 05, 2024 01:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த, திம்மராஜாம்பேட்டை கிராமத்தில், ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுபாட்டில் பர்வதவர்த்தினி சமேத ராமலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது.
இந்த கோவிலில், நடப்பாண்டிற்கான ஆடிப்பூர விழா, நாளை மறுநாள் நடைபெற உள்ளது. இந்த விழா முன்னிட்டு, பர்வதவர்த்தினி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடக்க உள்ளது.
அன்றைய தினம், மாலை 6:00 மணிக்கு, பர்வதவர்த்தினி அம்பாளுக்கு சிறப்பு வளையல் அலங்காரம் நடைபெற உள்ளது என, கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.