/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
அ.தி.மு.க., நிலைமை பரிதாபத்திற்குரியது: பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை
/
அ.தி.மு.க., நிலைமை பரிதாபத்திற்குரியது: பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை
அ.தி.மு.க., நிலைமை பரிதாபத்திற்குரியது: பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை
அ.தி.மு.க., நிலைமை பரிதாபத்திற்குரியது: பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை
UPDATED : ஆக 22, 2024 07:03 AM
ADDED : ஆக 22, 2024 12:54 AM

காஞ்சிபுரம்: பா.ஜ.,வின் உறுப்பினர் சேர்க்கை தொடர்பாக, மாநில அளவிலான பயிலரங்கம், காஞ்சிபுரம் அருகே செவிலிமேடு பகுதியில், தனியார் திருமண மண்டபத்தில், மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் நடந்தது.
நிகழ்ச்சி துவங்கும் முன், ஓரிக்கையில் உள்ள மஹா சுவாமிகள் மணிமண்டபத்தில் சாதுர்மாஸ்ய விரதம் மேற்கொள்ளும் காஞ்சி காமகோடி பீடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளிடம் அண்ணாமலை ஆசி பெற்றார். இதை தொடர்ந்து, நிகழ்ச்சி நடைபெறும் திருமண மண்டபத்தில் பயிலரங்கில் பங்கேற்றார்.
இதில், மேலிட பொறுப்பாளர் பிரகாஷ் ஜவடேகர், தமிழிசை, எச்.ராஜா, பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
இதில், தமிழகம் முழுதும் அடுத்த இரு மாதங்கள் மேற்கொள்ள வேண்டிய உறுப்பினர் சேர்க்கை தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து, கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப் பட்டது. மேலும், தமிழகம் முழுதும் இருந்து ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இதுகுறித்து அண்ணாமலை கூறியதாவது:
கடந்த 2024 தேர்தல் ஓட்டு சதவீதத்தை பாருங்கள். எத்தனை இடத்தில் அ.தி.மு.க.,வுக்கு டிபாசிட் போயுள்ளது என தெரியும். நான்காவது இடத்தில் எத்தனை இடங்களில் அ.தி.மு.க., வந்துள்ளது என்றும் தெரியும்.
கடநத் 2021ல் கூட்டணியில் இருக்கும்போது, நான்கு எம்.எல்.ஏ.,க்கள் பாஜ.,விற்கு கிடைத்தது என்கின்றனர். அ.தி.மு.க.,வுக்கு பல எம்.எல்.ஏ.,க்கள் கிடைப்பதற்கு பா.ஜ., கட்சி உழைத்தது.
இன்றைக்கு அ.தி.மு.க.,வின் நிலைமையை பார்த்து பரிதாபப்பட வேண்டும். 2024 தேசிய ஜனநாயக கூட்டணி, 2026ல் பெரிய மாற்றத்தை கொடுக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மாநில தலைவர் தமிழிசை கூறியதாவது:
தமிழகத்திலும் உறுப்பினர்களை சேர்த்தால், மோடி ஆட்சி அமைக்க முடியும் என்ற சீரிய எண்ணத்தில் பணியாற்ற உள்ளோம். தமிழகத்தில் சமூக நீதி இருக்க வேண்டும்.
ஆனால், இண்டியா கூட்டணியின் ஒரு அங்கமாக இருக்கும் மம்தா பானர்ஜி ஆட்சியின் கீழ் உள்ள மேற்கு வங்கத்தில், மருத்துவ மாணவியின் உயிரிழப்பு உதாசீனபடுத்தப்பட்டுள்ளது. அங்கு, மோசமான ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது.
அதேபோல், கிருஷ்ணகிரியிலும் ஒரு சம்பவம் நடந்துள்ளது. என்.எஸ்.எஸ்., பயிற்சிக்கு சென்ற மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் பா.ஜ.,வேகமாக வளர்கிறது. அதன் ஒரு பகுதியாக இந்த உறுப்பினர் சேர்க்கை நடக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.