/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
நெற்பயிர்களை சேதப்படுத்தும் விலங்குகளை கட்டுப்படுத்த ஆலோசனை
/
நெற்பயிர்களை சேதப்படுத்தும் விலங்குகளை கட்டுப்படுத்த ஆலோசனை
நெற்பயிர்களை சேதப்படுத்தும் விலங்குகளை கட்டுப்படுத்த ஆலோசனை
நெற்பயிர்களை சேதப்படுத்தும் விலங்குகளை கட்டுப்படுத்த ஆலோசனை
ADDED : மார் 27, 2024 09:11 PM
காஞ்சிபுரம்:நெற்பயிரை சேதப்படுத்தும் விலங்குகளை கட்டுப்படுத்தலாம் என, வேளாண் இணை இயக்குனர் தெரிவித்து உள்ளார்.
வேளாண் தொழில்நுட்ப வல்லுனர்கள் மற்றும் விவசாயிகள் கலந்தாய்வு கூட்டம், உழவர் பயிற்சி நிலையத்தில் நடந்தது. காஞ்சிபுரம் உழவர் பயிற்சி நிலைய வேளாண் துணை இயக்குனர் சுமதி தலைமை வகித்தார்.
காஞ்சிபுரம் வேளாண்மை இணை இயக்குனர் பிரின்ஸ் கிளெமென்ட் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
புகையான் தாக்குதல் மற்றும் கட்டுப்படுத்தும் முறை குறித்து, கீழ்நெல்லி வேளாண் அறிவியல் நிலைய தொழில்நுட்ப வல்லுனர் நாராயணன் பேசினார்.
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் துறையின் தாது உப்பு கலவை உபயோகம் மற்றும் கோழிகளுக்கான ரானிகெட் நோய் கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து, ஏனாத்துார் உழவர் பயிற்சி நிலைய பேராசிரியர் முனைவர் பிரேமவல்லி எடுத்துரைத்தார்.
மேலும், காட்டு பன்றிகளை கட்டுப்படுத்தும், திரவ விரட்டி மற்றும் மயில், குரங்குகளை கட்டுப்படுத்துவதற்கு, 8 லிட்டர் நீருடன், 2 லிட்டர் எர்போலிவ் என்னும் மருந்தினை கலந்து வைக்கலாம் என்றார்.
இதை பெறுவதற்கு, கோபிசெட்டிபாளையத்தைச் சேர்ந்த சுதர்சன், என்பவரை, 98420 68291 என்ற மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, வேளாண் இணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.