/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தண்ணீர் பந்தல் அமைக்க ஊராட்சிகளுக்கு அறிவுரை
/
தண்ணீர் பந்தல் அமைக்க ஊராட்சிகளுக்கு அறிவுரை
ADDED : மே 09, 2024 12:06 AM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம், வாலாஜாபாத், ஸ்ரீபெரும்புதுார், உத்திரமேரூர், குன்றத்துார் ஆகிய ஐந்து ஊராட்சி ஒன்றியங்களில், 274 ஊராட்சிகள் உள்ளன. இதில், சாலை, தெரு விளக்கு, குடிநீர் ஆகிய பல்வேறு வளர்ச்சி பணிகளை அந்தந்த ஊராட்சி நிர்வாகங்கள் செய்து வருகின்றன.
இருப்பினும், கோடை கத்திரி வெயிலுக்கு, ஊராட்சி தோறும் கால்நடை தண்ணீர் தொட்டிகளுக்கு தண்ணீர் நிரப்ப அந்தந்த ஊராட்சிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது.
அதைத் தொடர்ந்து, பேருந்து நிறுத்தங்கள் தோறும், தண்ணீர் பந்தல் அமைக்க வேண்டும் என, ஊராட்சி நிர்வாகங்களுக்கு, ஊரக வளர்ச்சி துறை உத்தரவிட்டுள்ளது.
பேருந்து நிறுத்தங்கள் தோறும் தண்ணீர் பந்தல் திறக்கும் பணியில் அந்தந்த ஊராட்சி நிர்வாகம் தீவிரம் காட்டி வருகிறது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், தேவரியம்பாக்கம் ஊராட்சியில், கோடை கத்திரி துவங்குவதற்கு முன்பே, தண்ணீர் பந்தல் திறந்திருப்பது குறிப்பிடத்தக்கது.