/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தரமான விதைகளை விவசாயிகளுக்கு கொடுக்க அறிவுரை
/
தரமான விதைகளை விவசாயிகளுக்கு கொடுக்க அறிவுரை
ADDED : மே 28, 2024 03:29 AM
காஞ்சிபுரம், : ஸ்ரீபெரும்புதுார் அடுத்த, குன்னம் கிராமத்தில், வேளாண் கூடுதல் இயக்குனர் சங்கரலிங்கம் சிறப்பு திட்டங்களை ஆய்வு செய்தார். இதையடுத்து, ஸ்ரீபெரும்புதுார் ஒருங்கிணைந்த வேளாண் கிடங்கு உள்ளிட்டவைகளை ஆய்வு செய்தார்.
அப்போது, விலை பட்டியலை விவசாயிகளுக்கு தெரியும் வகையில் அமைக்க வேண்டும் என, கிடங்கு மேலாளருக்கு அறிவுரை வழங்கினார்.
அதை தொடர்ந்து, காஞ்சிபுரம் -பஞ்சுப்பேட்டை வேளாண் அலுவலகத்தில், விதை அலுவலர்களிடம் கலந்துரையாடினார். சாகுபடிக்கு ஏற்ப தரமான விதைகளை தேர்வு செய்து, விவசாயிகளுக்கு கொடுக்க வேண்டும் என, அறிவுரை வழங்கினார்.
காஞ்சிபுரம் மாவட்ட பொறுப்பு வேளாண் இணை இயக்குனர் ராஜ்குமார், தரக் கட்டுப்பாடு உதவி இயக்குனர் சரவணன் உள்ளிட்ட வேளாண் துறையினர் பலர் பங்கேற்றனர்.