/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
10 ஆண்டுகளுக்கு பின் வட்டம்பாக்கத்திற்கு தார் சாலை
/
10 ஆண்டுகளுக்கு பின் வட்டம்பாக்கத்திற்கு தார் சாலை
10 ஆண்டுகளுக்கு பின் வட்டம்பாக்கத்திற்கு தார் சாலை
10 ஆண்டுகளுக்கு பின் வட்டம்பாக்கத்திற்கு தார் சாலை
ADDED : ஆக 09, 2024 12:18 AM

ஸ்ரீபெரும்புதுார்,:வட்டம்பாக்கம் ஊராட்சியில் 2,000க்கும் அதிகமான வீடுகள் உள்ளன. இப்பகுதியினர் பிரதான சாலையாக உள்ள, வட்டம்பாக்கம், பனப்பாக்கம் சாலை வழியே, வண்டலுார் -- வாலாஜாபாத் சாலையைவந்தடைகின்றனர்.
அங்கிருந்து, ஒரகடம், படப்பை, தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு, ஏராளமானோர் சென்று வருகின்றனர்.
காஞ்சிவாக்கம், வளையக்கரணை உள்ளிட்ட கிராமங்களை இணைக்கும்முக்கிய சாலையாகஉள்ளது.
தினசரி, மாணவர்கள் வேலைக்கு செல்வோர் இந்த சாலையை பயன் படுத்தி வருகின்றனர்.
இந்தநிலையில், 10 ஆண்டுகளுக்கு மேலாக இந்த சாலை முழுதும் சேதமடைந்து, குண்டும் குழியுமாக மாறி போக்கு வரத்திற்கு லாயக்கற்ற நிலையில் இருந்தது.
இரவு நேரத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர்.
மேலும், குண்டும் குழியுமாக சாலையில் செல்லும் இருசக்கர வாகனங்கள் அடிக்கடி பழுதாவதுடன், வாகன ஓட்டிகள் முதுகு வலியால் அவதி அடைந்து வருகின்றனர்.
இதனால், இப்பகுதியினர் சாலை மறியலில் ஈடுபட்டு, தங்களின் எதிர்ப்பினை தெரிவித்தனர்.
இதையடுத்து, 2 கோடி ரூபாய் மதிப்பில், மார்ச் மாதம் இந்த சாலை சீரமைப்பு பணிகள் துவங்கின. இந்த நிலையில், ஐந்து மாதங்களாக சாலை பணி மந்த கதியில் நடந்தது.
மூன்று மாதங்களுக்கு முன் தார் சாலை அமைக்க ஜல்லி கொட்டப்பட்டு, பணிகள் கிடப்பில் போடப்பட்டது. இதையடுத்து, இரு தினங்களுக்கு முன், தார் ஊற்றப்பட்டு சாலை சீரமைக்கப்பட்டது.