/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கைப்பந்தாட்ட போட்டி அகத்தியா பள்ளி முதலிடம்
/
கைப்பந்தாட்ட போட்டி அகத்தியா பள்ளி முதலிடம்
ADDED : செப் 04, 2024 01:05 AM
காஞ்சிபுரம்:செயின்ட் ஆன்ஸ் ஆலம்னி கிளப் சார்பில், சென்னை கெருகம்பாக்கத்தில், நேற்று முன்தினம் கைப்பந்தாட்ட போட்டிகள் நடத்தன. இதில், 10க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த பல்வேறு அணியினர் பங்கேற்றனர்.
இறுதிப் போட்டியில், வாலாஜாபாத் அகத்தியா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மற்றும் சென்னை செயின்ட் பீட்டர்ஸ் பள்ளி அணிகள் மோதின.
இதில், வாலாஜாபாத் அகத்தியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அணி 11:6 என்ற கணக்கில் வெற்றி பெற்று, முதலிடம் பிடித்தது. வெற்றி பெற்ற அணிக்கு கோப்பையும், 5,000 ரூபாய் ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டன. பள்ளி நிர்வாகி சாந்தி ஆஜய்குமார் மற்றும் பள்ளி முதல்வர் தேன்மொழி ஆகியோர் அணி யினரை பாராட்டினர்.