/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஆமதாபாத் விமானம் அவசரமாக தரையிறக்கம்
/
ஆமதாபாத் விமானம் அவசரமாக தரையிறக்கம்
ADDED : ஏப் 30, 2024 07:26 AM
சென்னை: ஆமதாபாதில் இருந்து சென்னை புறப்பட்ட விமானம், திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் மீண்டும் ஆமதாபாதில் அவசரமாக தரை இறங்கியது.
குஜராத் மாநிலம் ஆமதாபாதில் இருந்து நேற்று காலை 184 பயணியருடன் ஸ்பைஸ் ஜெட் விமானம் புறப்பட்டது.
நடு வானில் பறந்து கொண்டிருந்தபோது, விமானத்தில் திடீரென தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து, அந்த விமானம் மீண்டும் ஆமதாபாத் விமான நிலையத்திலேயே அவசரமாக தரை இறங்கியது.
விமானத்தில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறை உடனடியாக சரி செய்ய முடியாததால், சென்னைக்கு வரவேண்டிய அந்த விமானம் ரத்து செய்யப்பட்டது.
இந்த விமானம் ஆமதாபாதில் இருந்து சென்னைக்கு வந்து, பின் சென்னையில் இருந்து காலை 8:45 மணிக்கு, தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் புறப்பட்டு செல்ல வேண்டும்.
ஆனால், விமானம் ரத்து செய்யப்பட்டதால் சென்னையில் இருந்து ஹைதராபாத் செல்ல வேண்டிய சேவையும் நேற்று ரத்து செய்யப்பட்டது.
இப்பிரச்னையால், சென்னை விமான நிலையத்தில் நேற்று இரண்டு வருகை விமானங்கள், இரண்டு புறப்பாடு விமானங்கள் ரத்தாகி, பயணியர் அவதிப்பட்டனர்.

