/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
* குடிநீர், சாலை உள்ளிட்ட பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு ரூ.54.14 கோடி * கிராம சபையில் ஒப்புதல் பெற்று துவக்க உத்தரவு
/
* குடிநீர், சாலை உள்ளிட்ட பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு ரூ.54.14 கோடி * கிராம சபையில் ஒப்புதல் பெற்று துவக்க உத்தரவு
* குடிநீர், சாலை உள்ளிட்ட பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு ரூ.54.14 கோடி * கிராம சபையில் ஒப்புதல் பெற்று துவக்க உத்தரவு
* குடிநீர், சாலை உள்ளிட்ட பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு ரூ.54.14 கோடி * கிராம சபையில் ஒப்புதல் பெற்று துவக்க உத்தரவு
ADDED : மார் 21, 2025 11:34 PM

காஞ்சிபுரம், காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு மத்திய நிதி குழு மானியத்தில் இருந்து, 54.14 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. இத்தொகையை வைத்து, மாவட்ட ஊராட்சி, வட்டார நிர்வாகம், கிராம ஊராட்சிகள் என, மூன்று உள்ளாட்சி நிர்வாகங்களில் அடிப்படை வசதிகளை செய்ய அறிவுறுத்தப்பட்டு உள்ளது. கிராம சபையில் ஒப்புதல் பெற்ற பின்னரே பணிகளை மேற்கொள்ள வேண்டும் என, ஊரக வளர்ச்சி துறையினர் தெரிவித்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி குழு; காஞ்சிபுரம், வாலாஜாபாத், ஸ்ரீபெரும்புதுார், குன்றத்துார், உத்திரமேரூர் ஆகிய ஐந்து ஒன்றியக் குழு; 274 கிராம ஊராட்சிகள் அடங்கிய, ஊரக உள்ளாட்சி நிர்வாகங்கள் உள்ளன.
இந்த உள்ளாட்சி நிர்வாகங்களில் இருக்கும் மக்கள் தொகைக்கு ஏற்ப, சாலை, குடிநீர், கட்டடம் ஆகிய உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு, ஆண்டிற்கு ஒரு முறை மத்திய நிதிக் குழு மானியம் வழங்குகிறது.
இந்த நிதியை, இரு தவணைகளாக பிரித்து, அந்தந்த உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு, ஊரக வளர்ச்சி துறை நிர்வாகம், உரிய நேரத்தில் பகிர்ந்தளிக்கும்.
இதில், 60 சதவீதம் வரையறைக்கப்பட்ட பணிகள், 40 சதவீதம் வரையறுக்கப்படாத பணிகள் என, 100 சதவீதம் பணிகளை ஊரக வளர்ச்சி துறையினர் செய்து வருகின்றனர்.
குடிநீர், சுகாதாரம் ஆகிய வரையறைக்கப்பட்ட பணிகள் செய்வதற்கும், அரசு கட்டடம், கான்கிரீட் சாலை ஆகிய வரையறுக்கப்படாத பணிகள் என, இரு விதங்களாக நிதி பிரித்தளித்து செயல்படுத்தப்பட உள்ளன.
காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி குழுவிற்கு, 2.70 கோடி ரூபாய்; ஐந்து ஊராட்சி ஒன்றியக் குழுக்களுக்கு, 8.12 கோடி ரூபாய்; கிராம ஊராட்சி நிர்வாகங்களுக்கு, 43.32 கோடி ரூபாய் என, மொத்தம், 54.14 கோடி ரூபாய், 15வது மத்திய நிதிக்குழு மானியமாக மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
இதை, மூன்று ஊரக உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு ஊரக வளர்ச்சி துறை பகிர்ந்தளித்துள்ளது.
இதில், பள்ளி கட்டடங்கள் சீரமைப்பு, அங்கன்வாடி மைய கட்டடங்கள் சீரமைப்பு ஆகிய பல வித வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
குறிப்பாக, ஊராட்சிகளில் தேர்வு செய்யப்படும் பணிகள், சிறப்பு கிராம சபை கூட்டங்களிலும், ஒன்றியக் குழு மற்றும் மாவட்ட ஊராட்சி குழு ஒப்புதல் பெற அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
காஞ்சிபுரம் மாவட்டத்தில், மாவட்ட ஊராட்சி குழு, ஒன்றியக் குழு, ஊராட்சிகள் ஆகிய மூன்று அடுக்கு உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு, 54.14 கோடி ரூபாய், 15வது மத்திய நிதிக் குழு மானியம் கிடைத்துள்ளது.
இதில், தேர்வு செய்யும் பணிகளை அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளிடம் ஒப்புதல் பெற அறிவுரை வழங்கப்பட்டு உள்ளன.
ஊராட்சி கிராம சபை, ஒன்றியக் குழு கூட்டம், மாவட்ட ஊராட்சிக் குழு கூட்டங்களுக்கு பிறகே பணிகள் எண்ணிக்கை நிலவரம் இறுதியாக தெரிய வரும்.
இவ்வாறு அவர் கூறினார்.