/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஆழ்துளை கிணறு அமைக்க ரூ.1.41 கோடி ஒதுக்கீடு
/
ஆழ்துளை கிணறு அமைக்க ரூ.1.41 கோடி ஒதுக்கீடு
ADDED : ஜூலை 31, 2024 01:58 AM
காஞ்சிபுரம்:ஸ்ரீபெரும்புதுார் பேரூராட்சியில் வசிக்கும் மக்களின் வசதிக்காக, வார்டுகளில் சிறுபாலம் கட்டுவது, கடைகள் கட்டுவது போன்ற பணிகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில், அறிவுசார் மையத்தை சுற்றிலும் கடைகள் கட்ட, பேரூராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இதன் தொடர்ச்சியாக, பேரூராட்சி முழுதும், 18 இடங்களில் ஆழ்துளை கிணறு அமைத்து, மோட்டார் பொருத்தி, குடிநீருக்கான அடிப்படை வசதிகள் ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
வி.ஆர்.பி., சத்திரம், இந்திரா குடியிருப்பு, சந்தோஷ் நகர், சிவன்தாங்கல், ராமாபுரம் உள்ளிட்ட 18 இடங்களில், ஆழ்துளை கிணறு மற்றும் மோட்டார் பொருத்தி குடிநீர் வசதி செய்ய, 1.41 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இப்பணிகளுக்கு, தற்போது டெண்டர் விடப்பட்டுள்ளது. டெண்டர் பணிகள் முடிந்த பின் பணிகள் துவங்கும் என, பேரூராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.