/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பெருமாள் கோவிலுக்கு ரூ.75 லட்சம் ஒதுக்கீடு
/
பெருமாள் கோவிலுக்கு ரூ.75 லட்சம் ஒதுக்கீடு
ADDED : ஏப் 23, 2024 04:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம், : காஞ்சிபுரம் மாவட்டத்தில், வரதராஜ பெருமாள் கோவிலுக்கு, 25 கோடி ரூபாயும், வல்லக்கோட்டை முருகன் கோவிலுக்கு திருமண மண்டபம் மற்றும் விடுதி கட்ட, தலா 2 கோடி ரூபாய் என, பல்வேறு அறிவிப்புகளை, ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, கடந்தாண்டு சட்டசபையில் அறிவித்தார்.
அதன்படி, பல்வேறு கோவில்களில் திருப்பணிகள் நடக்கின்றன. இதில், உத்திரமேரூர் சுந்தரவரதராஜ பெருமாள் கோவிலுக்கு 75 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடக்கின்றன.
முதற்கட்டமாக, நிதி ஒதுக்கியதை தொடர்ந்து, டெண்டர் பணிகள் நடக்கின்றன. இதையடுத்து, ஸ்தபதி ஆய்வுக்கு பின், திருப்பணிகள் துவங்க உள்ளன.

