/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
948 விதமான கட்டுமான பணிகளுக்கு ஒதுக்கீடு ரூ.88 கோடி!: நிர்வாக அனுமதி அளித்து துறையினர் உத்தரவு
/
948 விதமான கட்டுமான பணிகளுக்கு ஒதுக்கீடு ரூ.88 கோடி!: நிர்வாக அனுமதி அளித்து துறையினர் உத்தரவு
948 விதமான கட்டுமான பணிகளுக்கு ஒதுக்கீடு ரூ.88 கோடி!: நிர்வாக அனுமதி அளித்து துறையினர் உத்தரவு
948 விதமான கட்டுமான பணிகளுக்கு ஒதுக்கீடு ரூ.88 கோடி!: நிர்வாக அனுமதி அளித்து துறையினர் உத்தரவு
ADDED : செப் 17, 2024 06:09 AM
காஞ்சிபுரம்: நுாறு நாள் வேலை திட்டத்தில், 948 விதமான கட்டுமான பணிகளுக்கு, 88.98 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து, ஊரக வளர்ச்சி துறை நிர்வாக அனுமதி அளித்து உள்ளது. இந்த பணிகளை, ஆறு மாதங்களில் முடிக்கவும் துறையினர் திட்டமிட்டுள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், காஞ்சிபுரம், வாலாஜாபாத், குன்றத்துார், ஸ்ரீபெரும்புதுார், உத்திரமேரூர் ஆகிய ஐந்து ஊராட்சி ஒன்றியங்களில், 274 ஊராட்சிகள் உள்ளன.
40,918 பேருக்கு வேலை
இவ்வூராட்சிகளில், மத்திய அரசு மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம் செயல்படுத்தி வருகிறது. இதில், 1.28 லட்சம் குடும்பங்களில், 1.98 லட்சம் பேர், மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின்கீழ் பதிவு செய்துள்ளனர்.
இதில், 1.45 லட்சம்பேருக்கு, 100 நாள் வேலைக்குரிய வருகை பதிவேடு புத்தகங்கள் வழங்கப்பட்டு உள்ளன.
வாரத்திற்கு ஆறு நாட்கள் என, சுழற்சி முறையில், நுாறு நாள் பணியாளர்களுக்கு வேலை வழங்கப்படுகின்றன. அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில், 40,918 பேருக்கு, நுாறு நாள் வேலை வழங்கப்படுகின்றன.
நுாறு நாள் பணியாளர்கள் மூலமாக, மரக்கன்றுகளை உற்பத்தி செய்தல், மரக்கன்று நடுதல், ஏரி, குளங்கள் துார்வாருதல் ஆகிய பணிகளை செய்து வருகின்றனர்.
இந்த பணிக்கு, 319 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து, 100 நாள் பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.
அனுமதி
இதையடுத்து, ஊராட்சி நிர்வாகம், 8 ரேஷன் கடை கட்டடம், 17 பள்ளிகளுக்கு சுற்றுச்சுவர், 2 சிறுபாலம், 4 குறுகிய பாலம், 578 புதிய குளங்கள், 54 மேய்க்கால் குளங்கள், 22 ஏக்கரில் தீவன புல் வளர்த்தல், 263 விளையாட்டு மைதானங்கள் ஆகிய அமைக்கும் பணிக்கு, 88.98 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
சமீபத்தில், ஊரக வளர்ச்சி துறையினர் நிர்வாக அனுமதி அளித்து உள்ளனர். இந்த பணிகளை, ஆறு மாதங்களில் முடிக்கவும் திட்டமிட்டு உள்ளனர்.
இந்த பணிகள் மூலமாக, ஊராட்சிகளுக்கு தேவையான கட்டடங்கள் மற்றும் புதிய நீர் சேகரிப்பு கட்டமைப்புகள் உருவாவதற்கு வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என, ஊரக வளர்ச்சி துறையினர் தெரிவித்தனர்.
இரு விதமான பணிகள்
இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில், 100 நாள் வேலை செய்யும் நபர்களுக்கு ஊதியம் மற்றும் கட்டுமானப் பொருட்களின் செலவு என, இரு விதமான பணிகள் தேர்வு செய்யப்படும்.
இதன் மூலமாக, நுாறு நாள் வேலை செய்யும் நபர்களுக்கு கூலி வழங்கி வருகிறோம்.
அறிவுரை
தற்போது, 938 விதமான பணிகளுக்கு, 88.98 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, புதிய கட்டுமான பணிகளுக்கு சமீபத்தில் நிர்வாக அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
இந்த கட்டுமான பணிகள், ஆறு மாதங்களில் முடிக்கவும், ஒப்பந்தம் எடுத்தவருக்கு அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.