/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மாநகராட்சி தெரு குழாய்க்கு பூட்டு காஞ்சியில் தனி நபர் ஒருவர் அடாவடி

ADDED : மே 15, 2024 11:54 PM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி, வளத்தீஸ்வரன் கோவில் தெருவில் உள்ள, விருபாட்சீஸ்வரர் கோவில் அருகில், மாநகராட்சி சார்பில், தெரு குழாய் அமைக்கப்பட்டுள்ளது.
அப்பகுதியினர் மட்டுமின்றி தெருவழியாக செல்லும் பாதசாரிகள், தள்ளுவண்டி வியாபாரிகள், தலைச்சுமை வியாபாரிகள், இருசக்கர வாகன ஓட்டிகள், தெரு குழாயில் வரும் குடிநீரை பிடித்து வந்தனர்.
இந்நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த தனி நபர் ஒருவர், மாநகராட்சிக்கு சொந்தமான குழாய்க்கு அடாவடியாக பூட்டு போட்டு பூட்டியுள்ளார். இதனால், தெருவாசிகள் மட்டுமின்றி, அவ்வழியாக செல்லும் பாதசாரிகள் தாகம் தீர்க்க வழியில்லாமல் உள்ளது.
எனவே, தனி நபர் ஒருவர், தன்னிச்சையாக தெரு குழாய்க்கு போட்டுள்ள பூட்டை மாநகராட்சி நிர்வாகம் அகற்றி, தெரு குழாயை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.