/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
திறப்பு விழாவிற்கு காத்திருக்கும் அங்கன்வாடி மைய கட்டடம்
/
திறப்பு விழாவிற்கு காத்திருக்கும் அங்கன்வாடி மைய கட்டடம்
திறப்பு விழாவிற்கு காத்திருக்கும் அங்கன்வாடி மைய கட்டடம்
திறப்பு விழாவிற்கு காத்திருக்கும் அங்கன்வாடி மைய கட்டடம்
ADDED : ஜூன் 15, 2024 12:07 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த, கோவிந்தவாடி ஊராட்சியில், அகரம் புதிய காலனி துணை கிராமம் உள்ளது. இங்கு, 13 லட்சம் ரூபாய் செலவில், மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின்கீழ், புதிய அங்கன்வாடி மையக் கட்டடம் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது.
இரண்டு மாதங்களாகியும், அங்கன்வாடி மைய கட்டடம் குழந்தைகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வரவில்லை என, குழந்தைகளின் பெற்றோர் இடையே புலம்பல் ஏற்படுத்தி உள்ளது.
இதனால், மகளிர் சுகாதார வளாக கட்டடத்தில் இயக்க வேண்டிய சூழல் உருவாகி உள்ளது.
எனவே, புதிய அங்கன்வாடி மையக் கட்டடம் குழந்தைகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.