/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் ஆர்ப்பாட்டம்
/
அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் ஆர்ப்பாட்டம்
ADDED : ஆக 06, 2024 12:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர், குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும்; ஈமக்கிரியை செலவு 25,000 ரூபாய் வழங்க வேண்டும்; குறைந்தபட்ச ஓய்வூதியம் 6,750 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட அம்சங்களை வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், சங்கத்தின் மாவட்ட தலைவர் தாமஸ் இளங்கோவன் தலைமையில், கோரிக்கைகளை முன்வைத்து, கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.
இதில், அங்கன்வாடி ஓய்வூதியர், சங்க நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். தமிழக அரசு, தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.