/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஊஞ்சல் பொன்னியம்மனுக்கு அன்னப்பாவாடை உற்சவம்
/
ஊஞ்சல் பொன்னியம்மனுக்கு அன்னப்பாவாடை உற்சவம்
ADDED : மார் 25, 2024 05:32 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெமிலி, : ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி பகுதியில், ஊஞ்சல் பொன்னியம்மன் கோவில் உள்ளது. நேற்று, அன்னப்பாவாடை உற்சவம் வெகுவிமரிசையாக நடந்தது.
இந்த உற்சவத்தை முன்னிட்டு, ஊஞ்சல் பொன்னியம்மனுக்கு, ஸ்ரீவித்யா பீடாதிபதி முரளிதர சுவாமிகள் தலைமையில், சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது.
இதையடுத்து, மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய ஊஞ்சல் பொன்னியம்மனுக்கு முன், அன்னம் படையலிடப்பட்டது. அதை பிரசாதமாக வழங்கப்பட்டது.
இதில், மஹா சரபேஸ்வரர் பீடாதிபதி ஞானபிரகாச சுவாமிகள் உள்ளிட்ட பீடாதிபதிகள் பலர் பங்கேற்றனர்.

