/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
விமான படை தேர்வுக்கு விண்ணப்பம் வரவேற்பு
/
விமான படை தேர்வுக்கு விண்ணப்பம் வரவேற்பு
ADDED : ஜூன் 15, 2024 11:48 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:இந்திய ராணுவத்தால், அக்னி வீர் வாயு எனப்படும் இந்திய விமானப்படை தேர்வுக்கு, ஜூலை 8 முதல், 28 வரை, https://agnipathvayu.cdac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இத்தேர்வு இணையதளம் வாயிலாக, 2024ம் ஆண்டு, அக்டோபர் மாதம் 18ல் நடைபெற உள்ளது.
இத்தேர்வுக்கு, 17 வயது முதல், 20 வயது வரையுடைய, பிளஸ் 2 அல்லது 3 ஆண்டு பட்டயப்படிப்பு அல்லது தொழில் படிப்புகள் முடித்திருக்க வேண்டும்.
தகுதியும், விருப்பமும் உள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள், இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என, கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.