/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஆசிரியர் பணிக்கு விண்ணப்பம் வரவேற்பு
/
ஆசிரியர் பணிக்கு விண்ணப்பம் வரவேற்பு
ADDED : ஜூன் 30, 2024 11:22 PM
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.
தமிழ், ஆங்கிலம், கணிதம், வேதியியல், தாவரவியல், வணிகவியல் என, ஆறு முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.
காலி பணியிடங்களை, முற்றிலும் தொகுப்பூதிய முறையில் தற்காலிகமாக, நிபந்தனையின் அடிப்படையில் நிரப்பப்பட இருப்பதாக கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார். ஆசிரியர்களுக்கான ஊதியமாக, 18,000 ரூபாய் வழங்கப்படும்.
தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், கல்வி சான்றுகளுடன், கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில், ஜூலை 5க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.