/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சீர்மரபினர்களிடமிருந்து விண்ணப்பம் வரவேற்பு
/
சீர்மரபினர்களிடமிருந்து விண்ணப்பம் வரவேற்பு
ADDED : ஆக 02, 2024 01:22 AM
காஞ்சிபுரம்:மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை வாயிலாக, சீர்மரபினர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு , பொருளாதார ரீதியில் வலுவூட்டும் திட்டம், மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டம், சீர்மரபினர்களுக்கு மத்திய, மாநில அரசுகளால் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி பெறுவதற்கு தரமான பயிற்சி அளித்தல், சிறப்பு காப்பீட்டுத் திட்டம் அளித்தல், சிறிய குழுக்களை உருவாக்க மற்றும் வலுப்படுத்தல் மற்றும் வீட்டுமனை பட்டா மற்றும் வீடுகள் கட்ட நிதியுதவி வழங்குதல் ஆகியவை செய்கிறது.
மேற்கண்ட திட்டத்தின் கீழ் தகுதியுள்ள பயனாளிகள் மத்திய அரசின் இணையதளமான www.dwbdnc.dosje.gov.in என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம்.
மேலும் விபரங்களுக்கு, காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என, கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.