/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கண்காணிப்பு குழுவில் சேர விண்ணப்பம் வரவேற்பு
/
கண்காணிப்பு குழுவில் சேர விண்ணப்பம் வரவேற்பு
ADDED : செப் 02, 2024 05:45 AM
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின்கீழ், மாவட்ட அளவிலான விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு குழு புதிதாக அமைக்க உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இக்கூட்டம், மூன்று மாதங்களுக்கு ஒரு முறை நடத்தப்படும். இக்குழுவின் தலைவராக மாவட்ட கலெக்டரும், செயல் உறுப்பினராக ஆதிதிராவிடர் நல அலுவலரும், உறுப்பினர்களாக எஸ்.பி., மாநகராட்சி கமிஷனர், பேரூராட்சிகள் உதவி இயக்குனர் என அதிகாரிகளும் இடம் பெறுவர்.
மேலும், மனித கழிவுகளை மனிதர்கள் அகற்றுவதை ஒழித்தல் குறித்த பொது தொண்டில் ஆர்வம் உள்ள 4 பேர் உறுப்பினர்களாக தேர்வு செய்யப்படுவர்.
உறுப்பினராக இக்குழுவில் பங்கேற்க விரும்புவோர், செப்.,6க்குள், கலெக்டர் அலுவலகத்தில் உள்ள ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகத்தில் நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம் என, காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.