/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஒன்றரை வயது பெண் குழந்தை கடத்தல் ரூ.3,000க்கு விற்க முயன்ற இருவர் கைது ஆட்டோ ஓட்டுனர்களுக்கு பாராட்டு

ADDED : ஏப் 15, 2024 03:55 AM

எண்ணுார் : கோல்கட்டாவைச் சேர்ந்தவர் சுஜித் மண்டல், 28. இவரது மனைவி சஞ்சனா. தம்பதிக்கு ஒன்றரை வயதில் பெண் குழந்தை உள்ளது. இவர்கள், சென்ட்ரல் ரயில் நிலையம் பிளாட்பாரத்தில் தங்கி, கூலி வேலை பார்த்து வந்துள்ளனர். நேற்று மதியம், ரயில் நிலையம் டிக்கெட் கவுன்டர் அருகே படுத்து உறங்கினர்.
எழுந்து பார்த்தபோது, விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை காணவில்லை. அதிர்ச்சியடைந்த பெற்றோர், அக்கம் பக்கத்தில் தேடி பார்த்தனர்; கிடைக்கவில்லை.
இது குறித்து, சென்ட்ரல் ரயில் நிலைய சப் - இன்ஸ்பெக்டர் சரளா தலைமையிலான போலீசார் விசாரித்தனர்.
அதேநேரம், சுனாமி குடியிருப்பில் சந்தேகத்திற்கு இடமான வகையில் இருவர், கையில் குழந்தையை வைத்துக் கொண்டு, 3,000 ரூபாய்க்கு வாங்கிக் கொள்ளுமாறு கேட்பதாக, எண்ணுார் போலீசாருக்கு ஆட்டோ ஓட்டுனர்கள் தகவல் அளித்தனர்.
அதன் அடிப்படையில், எண்ணுார் உதவி கமிஷனர் வீரகுமார் தலைமையிலான போலீசார், கையில் குழந்தையுடன் சுற்றித் திரிந்த இருவரை பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில், பிடிபட்டவர்கள், திருவொற்றியூர், சத்தியமூர்த்தி நகரைச் சேர்ந்த கார்த்திக், 28, திருவொற்றியூர் குப்பத்தைச் சேர்ந்த செல்வம், 40, என்பது தெரியவந்தது. அவர்களிடமிருந்து, குழந்தை மீட்கப்பட்டது.
மேலும், பெற்றோர் உறங்கிக் கொண்டிருந்த நேரத்தில், குழந்தையை கடத்தி வந்து எண்ணுாரில், 3,000 ரூபாய்க்கு விற்க முயற்சித்ததையும் ஒப்புக் கொண்டனர்.
குழந்தை கடத்தல் குறித்து, சென்ட்ரல் ரயில் நிலைய போலீசாரிடம் உறுதி செய்த எண்ணுார் போலீசார், குழந்தையை பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
கைது செய்யப்பட்ட இருவரையும், விசாரணைக்கு பின், சிறையில் அடைத்தனர். குழந்தையை மீட்க பேருதவியாக இருந்த ஆட்டோ ஓட்டுனர்களுக்கு போலீசார் பாராட்டு தெரிவித்தனர்.