/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பயன்பாட்டுக்கு வராமல் வீணாகும் அரும்புலியூர் ஊராட்சி கிணறு
/
பயன்பாட்டுக்கு வராமல் வீணாகும் அரும்புலியூர் ஊராட்சி கிணறு
பயன்பாட்டுக்கு வராமல் வீணாகும் அரும்புலியூர் ஊராட்சி கிணறு
பயன்பாட்டுக்கு வராமல் வீணாகும் அரும்புலியூர் ஊராட்சி கிணறு
ADDED : மே 28, 2024 05:55 AM

உத்திரமேரூர் : உத்திரமேரூர் ஒன்றியம், அரும்புலியூர் ஊராட்சியில், கோடை காலத்தில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க கூடுதல் குடிநீர் ஆதாரம் ஏற்படுத்த ஊராட்சி நிர்வாகம் தீர்மானித்தது.
இதற்காக மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின்கீழ், 12.30 லட்சம் ரூபாய் செலவில் சீத்தாவரத்தில் புதியதாக திறந்தவெளி கிணறு கடந்த ஆண்டு அமைக்கப்பட்டது.
இந்த கிணற்றில் இருந்து, சீத்தாவரம் பகுதிக்கு குடிநீர் வினியோகிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பணி முடிந்து ஓராண்டாகியும் இதுவரை அடுத்தகட்டப் பணிகள் துவங்கப்படாமல் கிணற்று நீர் வீணாகி வருகிறது.
இதுகுறித்து, அப்பகுதியினர் கூறியதாவது:
அரும்புலியூரில் புதிதாக கிணறு அமைத்த பகுதியை சுற்றி அரசு புறம்போக்கு நிலங்கள் ஏராளமாக உள்ளன. இதுவரை பயன்பாட்டிற்கு வராமல் வீணாகும் அக்கிணற்று நீரை, அப்பகுதியில் மரக்கன்றுகள் நடவு செய்து நீர் பாய்ச்சினால் பயனுள்ளதாக இருக்கும்.
இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.