/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சியில் சட்டசபை பொது நிறுவனங்கள் குழு ஆய்வு! 18ல் 9 உறுப்பினர்கள் 'ஆப்சென்ட்'

ADDED : ஆக 20, 2024 11:34 PM

காஞ்சிபுரம்:சட்டசபை பொது நிறுவனங்கள் குழு, காஞ்சிபுரம் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நேற்று ஆய்வு செய்தது. குழுவின் தலைவர் நந்தகுமார் தலைமையில், உறுப்பினர்கள் ராதாகிருஷ்ணன், கடம்பூர் ராஜு உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
காஞ்சிபுரம் செவிலிமேடில், வீட்டு வசதி வாரியத்தால் கட்டப்பட உள்ள பன்னடுக்கு அடுக்குமாடி கட்டட பணிகளை இந்த குழு பார்வையிட்டது. இதையடுத்து, ஓரிக்கையில் உள்ள ஜரிகை உற்பத்தி ஆலையையும், அங்குள்ள சிறிய அளவிலான பட்டு பூங்காவையும் பார்வையிட்டு ஆய்வு செய்தது.
இதைத் தொடர்ந்து, வல்லம் ஊராட்சியில் 700 கோடி ரூபாய் மதிப்பில் புதிதாக கட்டி திறக்கப்பட்ட தொழிலாளர் விடுதியையும், அங்குள்ள இருசக்கர உற்பத்தி தொழிற்சாலையையும் பார்வையிட்டனர்.
இந்த ஆய்வின்போது, திட்ட செயல்பாடுகள் பற்றி அதிகாரிகளிடம் குழு உறுப்பினர்கள் கேட்டறிந்தனர். பின், கலெக்டர் அலுவலகத்தில், அனைத்து துறை அதிகாரிகளுடனான ஆய்வு கூட்டம், குழுவின் தலைவர் நந்தகுமார் தலைமையில் நடந்தது.
இதில், கலெக்டர் கலைச்செல்வி, காஞ்சிபுரம் தி.மு.க.,- - எம்.எல்.ஏ., எழிலரசன், மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், மேயர் மகாலட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.