/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பிரதான சாலைகளில் தானியங்கி சிக்னல் நுகர்வோர் சங்கம் கலெக்டரிடம் மனு
/
பிரதான சாலைகளில் தானியங்கி சிக்னல் நுகர்வோர் சங்கம் கலெக்டரிடம் மனு
பிரதான சாலைகளில் தானியங்கி சிக்னல் நுகர்வோர் சங்கம் கலெக்டரிடம் மனு
பிரதான சாலைகளில் தானியங்கி சிக்னல் நுகர்வோர் சங்கம் கலெக்டரிடம் மனு
ADDED : மே 18, 2024 11:00 PM
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பிரதான சாலை சந்திப்புகளில், போக்குவரத்து தானியங்கி சிக்னல் பொருத்த வேண்டும் என, நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு சங்கத்தின், காஞ்சி மாவட்ட செயலர் வழக்கறிஞர் பெர்ரி, காஞ்சிபுரம் கலெக்டருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு விபரம்:
காஞ்சிபுரம் மாவட்டம் தலைநகராகவும், பட்டு நகரமாகவும் கோவில் நகரமாகவும் இருப்பதால், தினமும் ஆயிரக்கணக்கானோர் காஞ்சிபுரம் வந்து செல்கின்றனர்.
காஞ்சிபுரம் மாநகராட்சியாக அந்தஸ்து பெற்று நகரின் எல்லைகளும் விரிவடைந்து நகரமயமாதல் அதிகரித்துள்ளது. பெருகி வரும் மக்கள் தொகைக்கும், வாகனங்களுக்கும் ஏற்ப சாலை அகலமானதாக இல்லை. இதனால், போக்குவரத்து நெரிசலில் வாகனங்களை இயக்க வேண்டியுள்ளது.
மேலும், சாலை சந்திப்புகளில் ரவுண்டானா மற்றும் பிரதான சாலைகளில் மைய தடுப்புச்சுவர் இல்லாததால் விபத்து ஏற்படுகிறது.
எனவே, பிரதான சாலை சந்திப்புகளில் போக்குவரத்து தானியங்கி சிக்கனல் பொருத்த வேண்டிய சூழ்நிலை உள்ளது.
காஞ்சிபுரம் நகரில் காமராஜர் சாலை - நெல்லுக்காரத் தெரு சந்திப்புகளில் மட்டுமே ஒரே ஒரு தானியங்கி சிக்னல் இயங்கி வருகிறது.
எனவே, வந்தவாசி - ஓரிக்கை மிலிட்டரி சாலை சந்திப்பு, உத்திரமேரூர் - ஓரிக்கை மிலிட்டரி சாலை சந்திப்பு, பெரியார் நகர் - ஓரிக்கை சாலை, ரங்கசாமிகுளம் சாலை சந்திப்பு, கங்கைகொண்டான் மண்டபம் சந்திப்பு, மூங்கில் மண்டபம் சந்திப்பு, நெல்லுக்காரத் தெரு - ஆஸ்பிட்டல் ரோடு; பேருந்து நிலையம் நுழைவாயில் சந்திப்பு, ஒலிமுகமதுபேட்டை - அரக்கோணம் சாலை, ரயில்வே சாலை - காந்தி சாலை சந்திப்பு என, ஒன்பது இடங்களில் தானியங்கி சிக்னல் பொருத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

